ரேஷனில் ஏற்கெனவே ஸ்மார்ட் அட்டை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி ஸ்மார்ட் அட்டையை கொண்டு சென்றால் மட்டுமே அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால் இதிலும் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தாமலே ரேஷன் பொருட்கள் வாங்கப்பட்டதாக அட்டைதாரர்களுக்கு எஸ்எம்எஸ்கள் வருகின்றன.
இந்த முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்மூலம் இனிமேல் அட்டைதாரர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.இத்திட்டம் முதல்கட்டமாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.