நவம்பர் மாதம் வரை 3-வது சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளுக்கு வாரம்தோறும் வெள்ளிக்கிழமை விடுமுறையாகும். கொரோனா வைரஸால் எழுந்த அசாதாரண சூழ்நிலையில் கடந்த ஜூலை 10, ஆகஸ்ட் 7, செப்டம்பர் 4 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடை ஊழியர்கள் பணியாற்றினர்.
அவர்களுக்கு செப். 19, அக்.17, நவம்பர் 11 ஆகிய நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. அன்றைய தினம் ரேஷன் கடைகள் செயல்படாது என்று உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங்ரா சவான் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் உத்தரவுபடி சனிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படவில்லை. அடுத்த மாதம் 17, நவம்பர் 11-ம் தேதியும் ரேஷன் கடைகள் மூடப்பட்டிருக்கும்.