ரேஷன் கடைகளுக்கு 11 நாள்கள் பொதுவிடுமுறை

தமிழக அரசு 2021-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. அதன்படி அடுத்த ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின் உணவு வழங்கல் துறை ஆணையர், ரேஷன் கடைகளுக்கான பொது விடுமுறை நாட்களை வெளியிட்டுள்ளது. 

இதன்படி வரும் 2021-ம் ஆண்டில் பொங்கல், குடியரசு தினம், தமிழ் புத்தாண்டு, மே தினம், ரம்ஜான், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, காந்தி ஜெயந்தி, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறையாகும் என்று உணவு வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *