பதிவு நாளிலேயே ஆவணங்களை வழங்க உத்தரவு

பதிவு நாளிலேயே ஆவணங்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் பதிவுத் துறையின் சீராய்வுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் துறையின் செயலாளர் பீலா ராஜேஷ், தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“சார் பதிவாளர் அலுவலகளில் பதிவு நாளிலேயே ஆவணங்களை வழங்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

“நடப்பு நிதியாண்டில் பதிவுத் துறையின் மூலமாக அரசுக்கு 14,435 கோடி வருவாய் கிடைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *