சார் பதிவாளர் அலுவலகங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு அனுமதி கிடையாது
தமிழக பதிவுத் துறை சார்பில் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
“சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் நுழையும் பொதுமக்கள் முகக்கவசம் சரியாக அணிவதை உறுதி செய்ய வேம்டும். பெரும்பாலானோர் மூக்குக்கு பதிலாக கன்னங்களை மட்டுமே மறைக்கிறார்கள். சிலர் மூக்கு, வாயை மறைப்பது இல்லை. அவ்வாறு சரியாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு அனுமதி கிடையாது.
அனைவரின் உடல் வெப்பநிலையை தவறாமல் சரிபார்க்க வேண்டும். அதிகாரிகளும், ஊழியர்களும் அடிக்கடை கைகளை சுத்தம் செய்ய வேண்டும்” என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.