சுப்ரீமா கோர்ட் கதவை தட்டுகிறார் ரெஹானா பாத்திமா…

கேரளாவை சேர்ந்த ‘சமூக ஆர்வலர்’ ரெஹானா பாத்திமா. இவருக்கு அறிமுகமே தேவையில்லை. கேரளா மட்டுமன்றி இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். சர்ச்சைக்குரிய திரைப்படம், கொச்சி முத்த போராட்டம், சபரிமலை விவகாரம் என ரெஹானாவின் பயணம் முழுவதும் பரபரப்பாகவே இருக்கும்.

அண்மையில் அவர் தனது பேஸ்புக், யூ டியூப் பக்கத்தில் அரை நிர்வாண வீடியோ, புகைப்படத்தை அப்பட்டமாக வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த வீடியோவில் ரெஹானாவின் உடலில் அவரது குழந்தைகள் வண்ண ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் கெத்து காட்டும் ரெஹானா
மோட்டார் சைக்கிளில் கெத்து காட்டும் ரெஹானா

பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு வீட்டில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ரெஹானா விளக்கமும் அளித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் அளித்த புகாரின்பேரில் தகவல் தொழில்நுட்ப சட்டம், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் திருவல்லா போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் ரெஹனா வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன், “உங்கள் குழந்தைகளுக்கு தாராளமாக பாலியல் கல்வியை கற்றுக் கொடுங்கள். அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ரெஹானாவின் முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தார். தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து ஹெரானா சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் ரஞ்சித் மரார் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *