ரிசர்வ் வங்கி இணையத்தில் புகார் வசதி

ரிசர்வ் வங்கி இணையத்தில் புகார் அளிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை டெபாசிட்  தொகைக்கு அதிக வட்டி வழங்குவதாக விளம்பரம் செய்கின்றன.

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இத்தகைய நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்கின்றனர். ஆனால் சில நிறுவனங்கள் டெபாசிட் தொகையை திருப்பி தராமல் கிடப்பில் போடுகின்றன.

இதுதொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் பாதிக்கப்படும் மக்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி தனது இணையத்தில் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் புகார் அளித்து நிவாரணம் பெறலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *