சமூக வலைதளங்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள், இணையதள செய்தி வெளியீட்டாளர்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்களுக்கு மத்திய அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
சினிமாவை போன்று நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் தணிக்கை சான்றிதழ் முறை அமல்படுத்தப்படும். இந்திய பிரஸ் கவுன்சிலின் விதிமுறைகள் இணையதள ஊடகங்களுக்கும் பொருந்தும்.
பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சர்ச்சைக்குரிய பதிவை 36 மணி நேரத்துக்குள் நீக்க வேண்டும். தேசவிரோத தகவல்களை வெளியிட்ட, பகிர்ந்த நபரின் அடையாளத்தை சமூகவலைதள நிர்வாகங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
சமூக வலைதளங்கள் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண அந்தந்த சமூக வலைதள நிர்வாகங்கள் குறைதீர் குழுவை நியமிக்க வேண்டும். அரசு தரப்பில் டிஜிட்டல் தளங்கள் தொடர்பாக புகார் அளிக்க சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.