பெங்களூரு செல்ல புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
“மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெங்களூரு வருபவர்கள் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் என்று அறிவித்துள்ளோம். ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் ஆகும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் கைகளில் அடையாள முத்திரை பதிக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.