அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பருப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் அரசு பள்ளிகள் இன்றுவரை திறக்கப்படவில்லை. மதிய உணவு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

கடந்த மாதம் மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவியரின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த மாணவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியருக்கு அந்தந்த பள்ளிகளில் அரிசி, பருப்பு வழங்கப்பட்டு வருகிறது.


மாணவ, மாணவியர்களின் பெற்றோர் அவரவர் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு எந்த தேதியில் அரிசி, பருப்பு வழங்கப்படும் என்ற விவரங்களை அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *