ஒரு ஷேக் நடந்து செல்ல அவருக்கு பின்னால் ஆஜானுபாகுவான ரோபா பின்னால் கம்பீரமாக நடந்து செல்கிறது. இந்த வீடியோ கடந்த ஓராண்டாக சமூக வலைதளங்களில் தலை காட்டி வருகிறது. தற்போது மீண்டும் வைரலாக பரவி வருகிறது.
அதில், நடந்து செல்லும் ஷேக் பஹ்ரான் மன்னர் என்றும், பின்னால் நடந்து செல்லும் ரோபா அவரது இயந்திர பாதுகாவலர் என்றும் குறிப்பிடப்படுகிறது. அந்த ரோபாவில் 360 டிகிரி கோணத்தில் பார்க்கக்கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆங்காங்கே கைத்துப்பாக்கிகள் சொருகப்பட்டுள்ளன.
பணக்கார அரசியல்வாதிகள் இந்த ரோபோவை வாங்கி பாதுகாப்புக்கு வைத்துக் கொள்ளலாம்” என்று கூறப்படுகிறது.
இந்த தகவலை நம்பி சில ஊடகங்கள் அப்படியே செய்தியும் வெளியிட்டுள்ளன.
ஆனால் இந்த வீடியோவின் உண்மை என்னவென்றால் கடந்த 2019-ம் ஆண்டில் துபாய் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் இந்த ரோபா வரவேற்பாளராக செயல்பட்டது. 8 அடி உயரம் 60 கிலோ எடை கொண்ட இது பிரிட்டனின் சைபர்ஸ்டீன் நிறுவன தயாரிப்பாகும்.
ரோபாவுக்கு முன்னால் நடந்து சென்ற ஷேக், பஹ்ரைன் மன்னர் கிடையாது. கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். இனிமேல் இந்த வீடியோ உங்களுக்கு காட்சி தந்தால் உண்மையை உரக்க பதிவிடுங்கள்.