திருவள்ளூரில் ரவுடி மாதவனை கொலை செய்த கும்பல், தலை மற்றும் சடலத்தை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர். பின்னர் 2019-ல் மாணவன் கொலை செய்யப்பட்ட ரயில்வே தண்டவாளத்தில் தலையை வைத்து விட்டு சென்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே மனித தலை மட்டும் தனியாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதே போல புதுகும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள தைல தோப்பில் தலையில்லாமல் சடலம் ஒன்ற கிடப்பதாக தகவல் போலீஸாருக்கு வந்தது.

இரண்டு இடங்களுக்கும் சென்ற போலீஸார் தலை, சடலத்தை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்டவர் யாரென்று போலீஸார் விசாரித்தபோது பிரபல ரவுடி கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்தபாக்கத்தைச் சேர்ந்த மாதவன் என்று தெரியவந்தது. அவரை கொலை செய்தது யார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இவர் மீது கொலை, கொள்ளைகள் வழக்குகள் உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே 2 ரவுடிகள், ஒரு கல்லூரி மாணவர் என 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் ரவுடி மாதவன்.

சமீபத்தில் ஜாமீனில் மாதவன் வெளியில் வந்த நேரத்தில்தான் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாதவனின் தலையை துண்டித்த கொலையாளிகள் அதை மாணவன் இறந்து கிடந்த இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அதனால் பழிக்கு பழியாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ரவுடி ஒருவரை தலையை துண்டித்து கொடூரமாக கும்மிடிப்பூண்டியில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.