8 போலீஸாரை சுட்டுக் கொன்ற ரவுடி பிடிபட்டான்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 2-ம் தேதி அந்த மாநிலத்தின் கான்பூர் அருகே பிகாரு கிராமத்தில் தங்கியிருந்த அமர் துபேவை கைது செய்ய போலீஸார் சென்றனர். அப்போது சரணடைய மறுத்த விகாஸ் துபேவும் அவரது கூட்டாளிகளும் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.


இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 8 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் வடமாநில காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தப்பியோடிய விகாஸ் துபேவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 60-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர்.

ரவுடி விகாஸ் துபேவின் வலது கரமான அமர் துபே, கூட்டாளியான பிரபாத் மிஸ்ரா ஆகியோரை உத்தர பிரதேச போலீஸார் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.


வடமாநிலம் முழுவதும் விகாஸ் துபேவை போலீஸார் சல்லடை போட்டு தேடி வந்தனர். அவரை குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டது.


இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி நகரில் பதுங்கியிருந்த விகாஸ் துபே இன்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *