புலியாக பாய்ந்த ஆர்பிஎப் போலீஸ்காரர்.. எமனிடமிருந்து ரயில் பயணியை மீட்டார்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. டெல்லி, மும்பை உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.


மும்பையை சேர்ந்த திலீப் மாண்டே,காமாயானி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அந்த ரயிலுக்காக மும்பையில் உள்ள கல்யாணி ரயில் நிலையத்தில் அவரும் அவரது மகனும் நேற்று காத்திருந்தனர்.
அப்போது ரயில் நிலையத்துக்கு பவன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.

அதை காமயானி எக்ஸ்பிரஸ் என்று கருதிய திலீபும் அவரது மகனும் ரயிலில் ஏறினர். கடைசி நேரத்தில் தவறுதலாக வேறு ரயிலில் ஏறிவிட்டோம் என்பது அவருக்கு தெரியவந்தது.
அதற்குள் ரயில் புறப்பட்டு வேகமெடுக்கத் தொடங்கியது. பதற்றத்தில் ஓடும் ரயிலில் இருந்து திலீப் கீழே இறங்கினார்.

மும்பையில் ரயில் பயணியை மீட்ட ஆர்பிஎப் போலீஸ்காரர்.

ரயிலின் வேகத்தால் நிலைதடுமாறி பிளாட்பாரத்தில் விழுந்த அவர் ரயில் சக்கரத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது.
அங்கு பணியில் இருந்த ஆர்பிஎப் போலீஸ்காரர் சாகு புலியாகப் பாய்ந்து சென்று திலீப் ரயில் சக்கரத்தில் சிக்காமல் பிடித்து வெளியே இழுத்தார். எமனின் பிடியில் அவரை காப்பாற்றியுள்ளார். திலீபுக்கு பிறகு ரயிலில் இருந்து இறங்கிய அவரது மகன் பத்திரமாக வெளியே குதித்தார். இந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *