ஆவடியில் ரூ.10 லட்சம் பறிமுதல்

ஆவடியில் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள பருத்திப்பட்டு எம்ஜிஆர் நகர் சந்திப்பில் கடந்த சனிக்கிழமை மாலை ஆவடி சட்டப்பேரவை தொகுதி பறக்கும்படை அதிகாரி பிரியா வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி அவர் சோதனை நடத்தினார். 

அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ரூ.10 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆவடி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *