தமிழகத்தில் ரூ.100 கோடி ரொக்கம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.
வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உரிய ஆவணம் இன்றி ரூ.50,000-க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம், தங்கம், வெள்ளி, புடவைகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 3 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை நடத்தி வருகின்றன.
இதுவரை நடந்த சோதனைகளில் ரூ.100 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர சேலை, துணிகள், மடிக்கணினி, குக்கர், மதுபாட்டில்கள், புகையிலை, கஞ்சா உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.