ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை முகப்பேர் மேற்கு 4-வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் ராம்விலாஸ். இவரது வீட்டின் லாக்கரில் இருந்த பணம் அடிக்கடி காணாமல் போனது. இதை அவர் ரகசியமாக கண்காணித்தார். அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் அவரது 13 வயது மகன் தொடர்ந்து பணத்தை திருடியது தெரியவந்தது. சிறுவனிடம் விசாரித்தபோது, ஆன்லைன் விளையாட்டில் இளைஞர் ஒருவரிடம் பணத்தை பறிகொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுகுமார் என்பவர் செல்போன் மூலம் ஆன்லைன் விளையாட்டில் சிறுவனை ஏமாற்றி பணத்தை பறித்தது தெரியவந்தது. ஓராண்டில் ரூ.12 லட்சம் வரை அவர் மோசடி செய்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.