வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.2,000 அபராதம்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  கொரோனா நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் வெளியே சுற்றினால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை அவர்கள் வெளியே சுற்றி பிடிபட்டால் மாநகராட்சியால் நடத்தப்படும் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இதுதொடர்பாக அருகில் வசிப்பவர்கள் 25384520 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *