சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.25,000 அபராதம்

சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஜாபர்கான்பேட்டை சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் கடந்த 2019-ம் ஆண்டில் ஜாபர்கான் ராகவ ரெட்டி காலனியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது குமரன் நகர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, கிரிக்கெட் விளையாட விடாமல் தடுத்துள்ளார். மேலும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று லத்தியால் தாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரித்தது. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யாவுக்கு ரூ.25,000 அபராதம் விதித்து நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இந்த தொகையை பாதிக்கப்பட்ட சரண்ராஜுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *