மகளிர் சுய உதவி கடன் ரூ.2,756 கோடி தள்ளுபடி

மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் அனைத்தும் தகுதியான குழுக்களுக்கே சென்றடைந்துள்ளன. எனவே கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக அந்த சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதி வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகளின் உதவியுடன் ரூ.5,500 கோடி கொரோனா கால சிறப்பு கடன் உதவி உட்பட ரூ.20,000 கோடி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *