லஞ்ச வழக்கில் கைதான அரசு அதிகாரியிடம் ரூ.3.5 கோடி பறிமுதல்

லஞ்ச வழக்கில் கைதான அரசு அதிகாரியிடம் ரூ.3.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் மாவட்ட நகர் ஊரமைப்பு திட்ட அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேஸ்வரன் (வயது 52), லஞ்ச வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். 

அவருக்கு சொந்தமான 3 வீடுகள், 3 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது வீடு, வங்கி லாக்கர்களில் இருந்து ரூ.3.5 கோடி பணம் பறிமுதம் செய்யப்பட்டது. 1.38 கிலோ தங்க நகைகளையும் சிக்கின. 

லஞ்ச விவகாரங்களில் சிக்கும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளிடம் இருந்து கோடி, கோடியாக பணம் சிக்குவது பொதுமக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *