தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் கையெழுத்திடுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை முதல்வராக பதவியேற்க உள்ளார்.
அவர் பதவியேற்றதும் 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவார் என்று தெரிகிறது. இதில் கொரோனா நிவாரண நிதியாக ரூ,4,000 வழங்கும் திட்டத்துக்கான கோப்பில் புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.