மாநிலங்களுக்கு வட்டியின்றி ரூ.12,000 கோடி

மாநிலங்களுக்கு வட்டியின்றி ரூ.12,000 கோடி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

“கொரோனா ஊரடங்கால் சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் ரூ.12,000 கோடி கடனாக வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அந்த கடனை 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே தவணையாக மாநிலங்கள் திரும்ப செலுத்தலாம்.

நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக ரூ.25,000 கோடி செலவிடப்படும். மேலும் நுகர்வோர் தேவையை அதிகரிப்பதற்கு ஏற்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தப்பட உள்ளன” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *