தனியார் பள்ளிகளில் 2-ம் கட்ட இலவச சேர்க்கை

தனியார் பள்ளிகளில் 2-ம் கட்ட இலவச சேர்க்கை அக்டோபர் 12-ம் தேதி தொடங்குகிறது.

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். 

அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும். தமிழகத்தில் உள்ள 8,608 தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு 1,15,771 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 17 முதல் அக். 7 வரை சேர்க்கை நடைபெற்றது. 

இதில் இன்னமும் 55,000 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அந்த இடங்களுக்கு வரும் 12-ம் தேதி தொடங்கி நவம்பர் 7 வரை சேர்க்கை நடைபெறுகிறது. 

விருப்பமுள்ள மாணவர்கள் https://rte.tnschools.gov.in/ இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *