இலவச மாணவர் சேர்க்கை அக். 12 முதல் தொடக்கம்

இலவச மாணவர் சேர்க்கை அக். 12 முதல் தொடங்குகிறது.

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் கடந்த ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை நடைபெற்றது.

மொத்தம் ஒரு லட்சத்து 15 ஆயிரம் இடங்களுக்கு 86 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். அவர்களுக்கு கடந்த 1-ம் தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 

இதைத் தொடர்ந்து மீதமுள்ள இடங்களுக்கு வருகிற 12-ம் தேதி முதல் நவம்பர் 7-ம் தேதி வரை 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *