தனியார் பள்ளி இலவச சேர்க்கைக்கு நவ. 7 வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். அவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு செலுத்தும். முதல் கட்ட இலவச சேர்க்கை முடிவடைந்துள்ளது.
செந்னை மாவட்ட தனியார் பள்ளிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டமாக இலவச சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் https://rte.tnschools.gov.in/ இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என்னை சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.