புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்த முதல் நாளில் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி, மீன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதர கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் மருந்து, பால் விநியோக கடைகள் வழக்கம்போல செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதல்நாளான வியாழக்கிழமை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மளிகை, காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பிற்பகலில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தமிழம் முழுவதும் இதேநிலை காணப்பட்டது.