கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னை நெல்சன்மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 13-ம் தேதி இரவு அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எம்ஜிஎம் மருத்துவமனையின் துணை இயக்குநர் அனுராதா பாஸ்கரன் கவலையளிக்கும் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.