சபரிமலை ஆன்லைன் முன்பதிவு நவ. 1-ல் தொடக்கம்

சபரிமலை மண்டல கால பூஜைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.

“சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல கால பூஜைகளுக்காக வரும் நவம்பர் 15-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்த பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.

பூஜையின்போது திங்கள் முதல் வெள்ளி வரை 1,000 பக்தர்களும் சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பக்தர்களும், மண்டல பூஜை, மகரவிளக்கு தினத்தில் 5,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர்.

நிலக்கல், பம்பையில் கொரோனா பரிசோதனைக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பம்பை நதியில் குளிக்க அனுமதியில்லை. ஆற்றின் கரையில் ஷவர் வசதி ஏற்படுத்தப்படும். நிலக்கல், சன்னிதானம், பம்பையில் அன்னதானம் வழங்கப்படும்” என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *