தபாலில் சபரிமலை பிரசாதம்

தபாலில் சபரிமலை பிரசாதம் அனுப்ப தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது. 

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.

இதை கருத்தில் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பம்பை நதியில் குளிக்கக்கூடாது. முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எந்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஐயப்பன் கோயிலின் பக்தர்கள் கூட்டம் குறைவாக உள்ளது. பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனை வழிபட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் ஐயப்பன் கோயில் பிரசாசத்தை அனைத்து மாநில பக்தர்களுக்கும் தபாலில் அனுப்ப கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி அருகேயுள்ள தபால் நிலையத்தில் பணத்தை செலுத்தி முகவரியை பதிவு செய்தால் அடுத்த சில நாட்களில் பார்சலில் பிரசாதம் வீட்டுக்கு அனுப்பப்படும்.

இதில் அரவணை, அப்பம், நெய், குங்குமம், விபூதி, மஞ்சள் இருக்கும். கட்டணம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *