கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. வரும் நவம்பர் 16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. அடுத்த 2 மாதங்களுக்கு கோயில் நடை திறந்திருக்கும்.
எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க கேரள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன்படி கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை கொண்டு வரும் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.