மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 15-ம் தேதி மும்பையில் மழை பெய்தபோது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வீட்டு தோட்டத்தில் மழையில் நனைந்து மகிழ்ந்தார்.
சிறு குழந்தைபோல மழையை அணு அணுவாக அவர் ரசித்தார். இதை அவரது மகள் சாரா டெண்டுல்கள் வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்தார். இந்த வீடியோவை சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், எனது பிரியமான கேமராவுமன் சாரா டெண்டுல்கர் எனது மகிழ்ச்சியை வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த மழைத் துளிகள் எனது பால்ய பருவ கால நினைவுகளை துளிர்த்தெழ செய்துள்ளது” என்று டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.