சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் சைனிக் பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் 2021-22-ம் ஆண்டுக்கான 6 மற்றும் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி நடைபெறுகிறது.

அமராவதி நகர், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சாவூர், உடுமலையில் நுழைவுத் தேர்வு நடைபெறும். இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நவ. 19-ல் நிறைவடைந்தது. தற்போது டிச. 3-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. https://aissee.nta.nic.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *