சலூன் கடைகள் 9-ம் தேதி அடைப்பு

தமிழகத்தில் சலூன் கடைகள் 9-ம் தேதி அடைக்கப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம், குரும்பட்டியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வலியுறுத்தி அக்டோபர் 9-ம் தேதி மாநிலம் முழுவதும் சலூன் கடைகள் அடைக்கப்பட உள்ளன. 

இதன்படி தமிழகத்தில் மூன்றரை லட்சம் சலூன் கடைகள் அடைக்கப்படும் என்று முடி திருத்துவோர் சமூக நலச் சங்க மாநில பொதுச்செயலாளர் ராஜன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *