தலைகீழாக யோகா செய்யலாமா என்று அழைக்கிறார் சானியா மிர்சா.
6 வயதாகும் போது நீச்சல் வகுப்பிற்கு சானியா டென்னிஸ் களத்தை தாண்டித்தான் சென்றாக வேண்டும். அப்போது அவரது அம்மா, அவரை டென்னிஸ் ஆடும்படி கூறியுள்ளார்.
விடுமுறை என்பதால் பொழுதை கழிக்க சானியாவும் ஆட ஆரம்பித்துள்ளார். அதுவே பின்னாளில் அவரது வாழ்க்கையை மாற்றியது. டென்னிஸ் விளையாட்டில் பல சாதனைகளை அவர் படைத்தார்.
இந்தியாவுக்கு பல்வேறு பெருமைகளை சேர்த்த சானியா, பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
குறிப்பாக பெண்கள் தங்கள் உடல் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை சமூக வலைதளம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கை சானியா மிர்சா திருமணம் செய்தார். கடந்த 2018-ம் ஆண்டில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பேறுக்குப் பிறகு அவரது உடல் எடை கூடியது.
எனினும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் அவர் மீண்டும் பார்முக்கு வந்தார்.கொரோனா வைரஸால் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகள் முடங்கியுள்ளன.
எனினும் சானியா மிர்சா தனது உடலை கட்டுக்கோப்பாக பேணி வருகிறார். 33 வயதானாலும் தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.வீட்டில் யோகாசனம் செய்யும் புகைப்படத்தை அவர் இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதில் கொரோனா லாக்டவுன் காலத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் என்னை நிலைப்படுத்திக் கொள்ள யோகாசனங்களை செய்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி உள்பட ஏராளமான பிரபலங்கள் சானியா மிர்சாவின் போஸ்ட்டை லைக் செய்துள்ளனர்.
தனது இன்ஸ்டா போஸ்ட் மூலம் தலைகீழாக யோகா செய்ய சானியா மிர்சா அழைப்பு விடுக்கிறார். சானியாவை பின்பற்றி அனைத்து துறை சார்ந்த பெண்களும் உடல்நலனைப் பேணுவதில் அக்கறை செலுத்துவது அவசியம்.
குழந்தைபேறுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்பினார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில் சானியா- நாடியா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இது அவர் கைப்பற்றிய 42-வது பட்டமாகும்.
தாய்மைக்குப் பிறகு விளையாட்டில் சாதித்தவர் என்ற வகையில் முன்னணி வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி ஆகியோரின் வரிசையில் சானியா மிர்சாவும் இணைந்தார்.
கொரோனா வைரஸ் காலத்துக்குப் பிறகு அவர் மீண்டும் டென்னிஸில் சாதனை படைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.