சென்னை மாநகராட்சி பகுதிகளில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்

சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கவும் மாநகரின் அழகை மெருகேற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 79,477 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. தீவிர தூய்மை பணி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. பூங்காக்கள், ஏரிகள் புனரமைக்கப்படுகின்றன.

இதைத் தொடர்ந்து சென்னையில் 10 லட்சம் மரக்கன்றுகளை நட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் மரம் நடுவது, என்ன வகையான மரங்களை நடுவது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *