நீர்நிலைகளின் செயற்கைக்கோள் படங்களை பதிவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் ரூ.112 கோடி செலவில் பெரும்பள்ள ஓடையின் இருபுறமும் சுவர் எழுப்பப்படுகிறது. இதன்காரணமாக நீரோட்டம் தடைபடும். எனவே சுவர் எழுப்ப தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்து வருகிறது.
“நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் அனைத்து தாலுகாக்களில் உள்ள நீர்நிலைகளின் செயற்கைக்கோள் படங்களை மார்ச் 17-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும். இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் நிறைவேற்ற வேண்டும்.
ஈரோடு மாவட்டம், பெரும்பள்ள ஓடையின் நீரோட்டம் தடைபடாத வகையில் சுவர் கட்ட வேண்டும்” என்று தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு உத்தரவிட்டது.