என்95 முகக்கவசத்தால் ஆபத்து – மத்திய அரசு எச்சரிக்கை

என்95 முகக் கவசத்தால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது. அந்த முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் என்95 முகக் கவசத்தை பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றை இந்த முகக்கவசம் தடுக்கும். இது பாதுகாப்பானது என்றும் கூறப்பட்டது. திடீர் திருப்பமாக என் 95 முகக் கவசத்தால் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

என் 95 முகக்கவசம் அணிந்துள்ள பெண்


இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வால்வுடன் கூடிய என்95 முகக்கவசம் வெளிக்காற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பும். அதேநேரம் அதை அணிந்திருப்பவர் வெளியிடும் காற்றை அப்படியே வெளியேற்றும்.


ஒருவேளை என்95 முகக்கவசம் அணிந்திருப்பவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தால் அருகில் உள்ளவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் என்95 முகக்கவசங்களை அணிய வேண்டாம். பருத்தி துணி முகக்கவசங்களே வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும். அவற்றை பயன்படுத்தவும்” என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *