ஐஏஎஸ் தேர்வை ஒத்திவைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது.
இதன்படி முதல்நிலை தேர்வை அக்.4-ம் தேதி நடத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் கான்வில்கர், கவாய், கிருஷ்ணா முராரே அமர்வு, ஐஏஎஸ் தேர்வை ஒத்திவைக்க மறுத்துவிட்டனர். எனவே திட்டமிட்டபடி தேர்வு நடைபெற உள்ளது.