கொரோனா தடுப்பூசியால் கதறி அழும் இளம்பெண்

நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு கடந்த மார்ச் 1 முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. கடந்த ஏப்ரல்  1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதார ஊழியர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தடுப்பூசியால் சிலருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசியை பார்த்து கதறி அழும் இளம்பெண்ணின் வீடியோவை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஊசிக்கு அதிகம் பயப்படும் அந்த பெண், தடுப்பூசி போட வரும் நர்ஸை பார்த்து கதறி அழுகிறார். அவரது கண்களில் இருந்து தாரை, தாரையாக கண்ணீர் வடிகிறது. ஊசி போடுவதற்கு முன்பே ஓவென்று கூப்பாடு போடுகிறார்.

அம்மா, அம்மா என்று கதறி அழுகிறார். அவரோடு வந்தவர்கள் இலம்பெண்ணை ஆறுதல் செய்கின்றனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இளம்பெண்ணுக்கு நர்ஸ் தடுப்பூசி போடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *