தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிச. 27-ம் தேதி தேசிய திறனாய்வு தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பத்தை  http://www.dge.tn.gov.in இணையத்தில் நவ. 21 முதல் 30-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் நவ. 30-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *