தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1, 6, 9-ம் வகுப்புகளுக்கு வருகிற 17-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும்.
தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை இணையதளம் வழியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் பள்ளிகளை திறக்க தற்போது சாத்தியம் இல்லை. கொரோனா வைரஸ் தொற்று குறைந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.