அக். 31 வரை பள்ளிகளை திறக்க தடை தொடருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அக்.31 வரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பள்ளி, கல்லூரிகளை திறக்க அக். 31 வரை தடை தொடரும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அக். 1 முதல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் சந்தேகங்களை கேட்டறிய அனுமதித்து செப். 24-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணை நிறுத்தி வைக்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.