பள்ளி, கல்லூரி திறப்பு ரத்து

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 16-ம் தேதி முதல் 9,10, 11, 12-ம் வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த 9-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் பெற்றோரின் கருத்துகள் கேட்டறியப்பட்டன.

இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பேரில் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை நவம்பர் 16-ம் தேதி திறக்கும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை இறுதியாண்டு அறிவியல், தொழில்நுப்ட மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் 2-ம் தேதி வகுப்புகளை தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதர மாணவர்களுக்கு கல்லூரிகளை திறப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப அறிவிக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *