நவ. 16-ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு வரும் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் 16-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும்  9, 10, 11, 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 

மேலும் அனைத்து கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை வரும் 16-ம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பள்ளி, கல்லூரி விடுதிகள் வரும் 16-ம் தேதி முதல் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

பள்ளி, கல்லூரிகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *