அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் இலவச புத்தகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் இலவச புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதன்படி 2, 3, 4, 5, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகை பை வழங்கப்படும்.


புத்தகங்களை பெறுவதற்கு பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்கள் என்ற வகையில் பாடநூல்களை விநியோகிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *