பள்ளி, கல்லூரி திறப்பு தள்ளிபோகுமா?

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவது தள்ளிவைக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி முதல் கல்லூரிகள் செயல்படலாம் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகளை தொடங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் குறையாத நிலையில், 2-வது கொரோனா அலை ஏற்பட வாய்ப்புள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க கல்வியாளர்கள், பெற்றோர் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அரசு தரப்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளி, கல்லூரி திறப்பு டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *