திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச. 14 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 பேர் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
நடப்பு கல்வியாண்டுக்கான திறனாய்வு தேர்வு ஜன. 24-ம் தேதி நடைபெறுகிறது. ஊரகப் பகுதிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் தலைமையாசிரியர்கள் மூலம் டிச. 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதும் மாணவரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தேர்வுத் துறை இயக்குநர் சி.உஷா ராணி தெரிவித்துள்ளார்.