அரசு பள்ளி ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
“அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது.
இடஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த வயது வரம்பு நிர்ணயத்தால் 40 வயதுக்கு மேல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆசிரியர்களின் அரசு பணி கனவு பொய்த்துப் போகும் என்று ஆசிரியர் சங்கங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன.