குட்கா, பான் மசாலா விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதோடு, அந்த கடையை மூடி சீல் வைக்கலாம். அப்போதுதான் யாரும் தவறு செய்ய மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 3 மாதங்களில் தங்களுடைய எல்லைகளில் குட்கா, பான்மசாலா போன்ற பொருட்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். புகையிலை இல்லாத மாவட்டங்களை உருவாக்கி காட்டும் உணவுத் துறை அதிகாரிகளுக்கு அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.